முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைய ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      உலகம்
Hungary 2023-02-27

Source: provided

புடாபெஸ்ட் : நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கினார். இதனிடையே கடந்த ஆண்டு பின்லாந்து நேட்டோ அமைப்பில் சேர்ந்தது. தொடர்ந்து சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைய நேட்டோ நாடுகள் ஒப்புதல் அளித்தன. 

இதில் ஹங்கேரி அரசு மட்டும் நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உள்ள நாடாளுமன்றத்தில் இதற்கான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், சுவீடன் இணைவதற்கு ஆதரவாக 188 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 6 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். 

இதைத் தொடர்ந்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், ஆதரவு பெருகி வருவதால், நேட்டோ அமைப்பில் 32-வது நாடாக சுவீடன் இணையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து