முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 4-ம் தேதி ஆஜராக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8-வது முறையாக சம்மன்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      இந்தியா
Kejriwal 2024-02-17

Source: provided

புதுடெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக மார்ச் 4-ம் தேதி ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. 

கடந்த ஓர் ஆண்டாக ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் சிலர் சிறையில் உள்ளனர். இவ்வழக்கில் ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது.

இதுவரை 7 சம்மன்கள் அனுப்பப்பட்டும், அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை.  மேலும் சம்மன் சட்ட விரோதமானது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் உணர்வோடு அனுப்பப்படும் சம்மன்கள் என்று கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். 

இதுகுறித்து அண்மையில் டெல்லி முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், 

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை மார்ச் 16-ம் தேதி வரவுள்ளதால், தினமும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக மார்ச் 4-ம் தேதி ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து