முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகளாவிய வாய்ப்புகள் நம் கதவை தட்டுகின்றன : மதுரையில் பிரதமர் மோடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      தமிழகம்
Modi 2023-02-27

Source: provided

மதுரை : பல நாடுகளில் உற்பத்தியாகும் கார்களில் நம் சிறு, குறு நிறுவனங்கள் தயாரிக்கும் பாகங்களைக் கொண்டுள்ளன; உலகளாவிய வாய்ப்புகள் நம் கதவுகளை தட்டுகின்றன. என மதுரை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன டிஜிட்டல் கருத்தரங்கில் பிரதமர் பேசினார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று மதியம் தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை 234 தொகுதிகளில் மேற்கொண்ட பாதயாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை வீரபாஞ்சான் டி.வி.எஸ்., லட்சுமி பள்ளியில் நடந்த சிறு, குறுந்தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்றார். அங்கு, மாணவர்களுடன் கலந்துரையாடிய மோடி, மத்திய பா.ஜ., அரசின் ஸ்டார்ட் அப் திட்டத்தால் தொழில் முனைவோரானவர்களை சந்தித்தார். மத்திய அரசின் மானியம், கடனுதவி, சலுகைகளால் சிறு,குறுந்தொழில்கள் அடைந்த வளர்ச்சி குறித்து தொழிலதிபர்கள் மத்தியில் பேசினார்.

பின்னர் சிவகங்கை ரோடு சந்திப்பு, ரிங் ரோடு வழியாக கப்பலுார், தனக்கன்குளம், திருநகர் வழியாக பசுமலை (தாஜ்) கேட் வே ஓட்டலுக்கு சென்று இரவு தங்கினார். பிறகு, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக டிஜிட்டல் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது.,

பல நாடுகளில் உற்பத்தியாகும் கார்களில் நம் சிறு, குறு நிறுவனங்கள் தயாரிக்கும் பாகங்களைக் கொண்டுள்ளன; உலகளாவிய வாய்ப்புகள் நம் கதவுகளை தட்டுகின்றன."எம்எஸ்எம்இகளின் எதிர்காலத்தை நாட்டின் எதிர்காலமாக நாடு இன்று பார்க்கிறது. பணத்தில் இருந்து திறமை வரை எம்எஸ்எம்இ-களின் வளங்களை அதிகரிக்க அனைத்துத் துறை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் முத்ரா. யோஜனா மற்றும் பி.எம். விஸ்வகர்மா போன்ற திட்டங்கள் இந்த திசையில் பெரும் பங்கு வகிக்கின்றன. கொரோனா காலத்தில், MSME கடன் உத்தரவாத திட்டம் லட்சக்கணக்கான வேலைகளை காப்பாற்ற உதவியது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து