முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் நாளை முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம் : 9.25 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      தமிழகம்
Plus-2-Exam-Results 2023-05

Source: provided

சென்னை : தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அடுத்தடுத்து தொடங்கி நடைபெற உள்ளது. பிளஸ்-2 தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3,302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசியாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடுவதை தவிர்க்க 3,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. தேர்வுக் கூடங்களில் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள்களை மாற்றுதல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாளை 1-ம் தேதி தொடங்கும் பிளஸ்-2 தேர்வு 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதலில் தமிழ் தேர்வும் அதனை தொடர்ந்து 5-ம் தேதி ஆங்கிலம், 8-ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் தமிழ், ஹோம் சயின்ஸ், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகள், 11-ம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், 15-ம் தேதி இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, 19-ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 22- ம்  தேதி பயாலஜி, தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. 

ஒவ்வொரு தேர்வுக்கும் 3, 4 நாட்கள் இடைவெளி உள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பதட்டம் அடையாமல் தேர்வு எழுதுவதற்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. வினாத்தாள்கள் கட்டுகாப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். 

ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை பாதுகாப்பாக விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து