முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை : டெல்லி அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      இந்தியா
Rupees-2

Source: provided

புது டெல்லி : தமிழகத்தை போன்று டெல்லியிலும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 நிதியாண்டுக்கான  டெல்லி அரசின் ரூ.76,000 கோடி பட்ஜெட்டை நிதி  அமைச்சர் அதிஷி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் முக்கியமந்திரி மகிளா சம்மன் யோஜனா' திட்டத்தின் கீழ் டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் நிதி அமைச்சர் அதிஷி பேசியதாவது,

நாங்கள் அனைவரும் ராம ராஜ்ஜியத்தால் ஈர்க்கப்பட்டோம். நாங்கள் உழைக்கிறோம். ராம ராஜ்ஜியத்தின் கனவை நனவாக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. டெல்லி அரசுப் பள்ளிகளில் படிக்கும் 2,121 மாணவ, மாணவியர் 2023-ல் ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து