முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 10-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் : சென்னை வானிலை மையம் தகவல்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      தமிழகம்
Weather-Center 1

Source: provided

சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 10-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 10-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று  05-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து