முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருந்தலைவர் காமராஜரை அவமதித்த கட்சி காங்கிரஸ் : நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      இந்தியா
mODI 2023-05-25

நெல்லை, பெருந்தலைவர் காமராஜரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி வணக்கம் திருநெல்வேலி என தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது., 

தமிழ்நாட்டில் பெண்கள் மத்தியில் எனக்கு ஆதரவு உள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் புல்லெட் ரெயில் இயக்கப்படும். தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை விரும்புபவர்களின் முதல் தேர்வு பா.ஜ.க.வாகதான் இருக்கும். உலகம் முழுவதும் திருவள்ளூவர் மையங்களை அமைக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. தமிழ் கலாசாரம் மீது தி.மு.க., காங்கிரசுக்கு வெறுப்பு உள்ளது. செங்கோல் விவகாரத்தில் இது உண்மையானது. குடும்ப கட்சியான காங்கிரஸ் பெருந்தலைவர் காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர். புகழை தி.மு.க. அவமதித்தது. இவ்வாறு அவர் கூறினார்.  தமிழ் கலாசாரத்தை தி.மு.க., காங்கிரஸ் வெறுக்கிறது. இந்த கூட்டத்தை பார்த்து இன்டியா கூட்டணிக்கு தூக்கம் தொலைந்திருக்கும். தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து