முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையை வீழ்த்தி சென்னை அணி 4-வது வெற்றி

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      விளையாட்டு
CSK 2024-03-11

Source: provided

மும்பை : சிவம்துபேயின் அதிரடி ஆட்டம் , பத்திரானாவின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் தல டோனியின் 20 ரன்கள் ஆகியவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளது.

ரச்சின் ரவீந்திரா...

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 29-வது லீக் ஆட்டம் (ஏப். 14) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே களமிறங்கினர். ரஹானே 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின், களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ருதுராஜ் - துபே...

இதனையடுத்து, கேப்டன் ருதுராஜ் மற்றும் ஷிவம் துபே இருவரும் களத்தில் இருந்தனர்.  ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.  ஷிவம் துபே கடைசி வரை ஆட்டமிழக்காமல் பந்துகளை சிக்ஸர்களை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார்.  38 பந்துகளில் 66ரன்கள் எடுத்த அவர் 10 பவுண்டிரிகள் மற்றும் 2சிக்ஸர்கள் விளாசினார்.  இறுதி ஓவரில் ஷிவம் துபேயுடன் கைகோர்த்த எம்.எஸ்.டோனி முதல் 3 பந்துகளில் சிக்ஸர்கள் விளாசி அதிரடி காட்டினார். 4பந்துகளில் 20 விளாசிய டோனியின் ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ராஜ விருந்துதான்.

பத்திரானா... 

இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு சிஎஸ்கே அணி 206 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் விளையாடி ரன்களை அதிரடியாக குவிக்கத் தொடங்கினர். இஷான் கிஷன் 23 ரன்களுக்கு பத்திரானா பந்துகளில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த வீரர்களும் பத்திரானா பந்துகளுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுகளை பத்திரானாவே வீழ்த்தினார். ஆனாலும் எதற்கும் அசராமல் ஹிட் மேனாக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரோகித் ஷர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் நிதானமாக விளையாடி ரன்களை அதிகரித்தார்.

சேப்பாக்கத்தை... 

அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்தது.  வெறுமனே 20 ரன்கள் வித்தியாசத்தில்தான் மும்பை அணி தோல்வியை தழுவியது. டோனி அடித்த 20 ரன்கள் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியமான ரன்களாக பார்க்கப்படுகிறது. மும்பை அணி ஹோம் கிரவுண்ட் என அழைக்கப்படும் வான்கடேவில் மஞ்சள் படையின் ஆக்ரோஷமான சப்தங்கள் சேப்பாக்கத்தை பார்த்தது போல் இருந்தது கிரிக்கெட் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இப்போட்டியான ஆட்ட நாயகனாக 4விக்கெட்களை வீழ்த்திய மதீஷ் பத்திரானா தேர்வு செய்யப்பட்டார்.

கெய்க்வாட் புதிய சாதனை 

ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆட்டத்தில் அடித்த ரன்களையும் சேர்த்து இதுவரை ஐ.பி.எல். தொடரில் அவர் 57 இன்னிங்சில் 2021 ரன்கள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற கே.எல் ராகுல் சாதனையை உடைத்துள்ள ருதுராஜ் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் விவரம் வருமாறு., 1. ருதுராஜ் கெய்க்வாட் : 57 இன்னிங்ஸ், 2. கேஎல் ராகுல் : 60 இன்னிங்ஸ், 3. சச்சின் டெண்டுல்கர் : 63 இன்னிங்ஸ், 4. ரிஷப் பண்ட் : 64 இன்னிங்ஸ், 5. கௌதம் கம்பீர் : 68 இன்னிங்ஸ். மேலும் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் கிறிஸ் கெயில், ஷான் மார்ஷ்க்கு அடுத்து 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து