முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்திக் குறித்து பீட்டர்சன்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      விளையாட்டு
Hardik-Pandya 2023 08 02

Source: provided

சொந்த ரசிகர்களே எதிர்ப்பு தெரிவிப்பதால் மனதிற்குள் மிகப்பெரிய வேதனையை வைத்துக்கொண்டு பாண்ட்யா சிரிப்பதுபோல் நடித்து வருவதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை தொடர்ந்தால் பாண்டியாவின் மனநிலையும் கிரிக்கெட்டும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:- "டாஸ் வீசும்போது அதிகமாக சிரிக்கும் அவர் மகிழ்ச்சியுடன் இருப்பதுபோல் நடிக்கிறார். உண்மையில் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அங்கே இருந்த நான் அதைப் பார்த்தேன். அவர் நெருப்பில் இருப்பதைப் போன்ற நிலையில் இருக்கிறார். உண்மையில் இது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லலாம்.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு என்ன நடக்கிறது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள் சி.எஸ்.கே. முன்னாள் கேப்டன் தோனி மைதானம் முழுவதும் பாண்ட்யா பந்து வீச்சை அடித்து நொறுக்குவதை பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். அது பாண்ட்யாவுக்கு வலியை கொடுக்கும். ஏனெனில் இந்திய வீரரான அவர் உணர்ச்சிவசப்படுகிறார். எனவே இப்படி நடக்கும்போது அது அவரை பாதிக்கிறது. இது நடக்காமல் இருக்க வேறு ஏதாவது நடக்க வேண்டும்" என்று கூறினார்

__________________________________________________

இந்திய ஆண்கள் அணி சரிவு

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் இந்திய ஆண்கள் அணி 4-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 'ஒயிட்வாஷ்' ஆனது. இதனால் இத்தகைய சரிவை சந்தித்துள்ளது.

இந்திய அணி தரவரிசையில் முன்னேற, அடுத்து ஐரோப்பாவில் நடக்கவுள்ள புரோ லீக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். முதல் மூன்று இடங்களில் முறையே நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன. பெண்கள் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் நீடிக்கிறது.

__________________________________________________

ஜோரன் விலீஜென் ஜோடி சாம்பியன்

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பெல்ஜிய ஜோடியான ஜோரன் விலீஜென் - சாண்டர் கில்லே இணை ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரெவ் பிரேசிலின் மார்செலோ மெலோ இணையை எதிர்கொண்டது. 

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய ஸ்வேரெவ் இணை 2வது செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி செட்டில் அபாரமாக ஆடிய ஜோரன் விலீஜென் இணை 10-5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இறுதியில் இந்த ஆட்டத்தில் ஜோரன் விலீஜென் - சாண்டர் கில்லே இணை 5-7, 6-3, 10-5 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்வேரெவ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து