Idhayam Matrimony

அயோத்தியில் ராம நவமி விழா: ராமர் நெற்றியில் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
ayodhya-ramar-2024-04-16

அயோத்தி, அயோத்தியில் நடந்து வரும் ராமநவமி விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று கோவில் கருவறையில் வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது. 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 

ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9- வது நாளான இன்று (17-ம் தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடக்கிறது.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது என கோவில் கட்டுமான குழு தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது. 

பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும். இந்த அபூர்வ நிகழ்வு சுமார் 5 நிமிடம் நீடிக்கும். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் காணும் வகையில் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராம நவமி விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து