முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விஷாலுடன் மூன்றாவது படம்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      சினிமா
Vishal 2024-04-22

Source: provided

ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ‘ரத்னம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது விழாவில்

இயக்குநர் ஹரி பேசியதாவது…

“இது எனது 17வது படம், விஷாலுடன் மூன்றாவது படம். விஷால் தயாரிப்பாளர் கார்த்திக்கை அறிமுகப்படுத்தினார், அந்த கம்பெனியில் கார்த்திக் சுப்பராஜ் இருந்தார், ஒரு இயக்குநர் இருக்கும் கம்பெனியில் வேலை பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது. இந்தப்படம் இந்தக்கால ஆடியன்ஸுக்கு பிடிக்கும் வலையில் 60% ஆக்சன் 40% கமர்ஷியலாக இருக்கும். விஷால் ஆக்ஷ‌ன் செய்வார், ஆனால் எமோஷனிலும் அசத்தியுள்ளார்.

எல்லா ஆர்டிஸ்டும் நன்றாக வேலை பார்த்துள்ளனர். சிங்கிள் ஷாட் பற்றி எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரே ஷாட்டில் எட்டு சீக்குவன்ஸ், நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் செய்துள்ளனர்.

எனக்கு எதார்த்தம் இருக்கனும்னு ஆசைப்படுவேன், ஏன் வைத்தார் என யாரும் கேட்கக் கூடாது. அந்த எண்ணத்தில் தான் உழைத்து உருவாக்கியுள்ளோம். 3.5 கிமீ தூரத்திற்கு நான்கு இடங்களில் மாறி மாறி ஹீரோ ஹீரோயினோடு போய் ஆக்ஷ‌ன் செய்துள்ளார், இது செய்யவே முடியாது என்றார்கள். வெற்றிமாறன், ரஞ்சித் எல்லாம் ராவாக தருகிறார்கள். அது மாதிரி செய்ய ஆசைப்பட்டேன். விஷால் உழைத்து தந்தார். அனைவரும் ஒத்துழைப்பு தந்தனர்.

ஒரு நாள் முழுக்க ரிகர்சல் பார்த்து மூன்றாவது ஷாட்டில் எடுத்து முடித்த போது தான் நிம்மதியாக இருந்தது. ஆடியன்ஸை மதித்து படம் எடுத்துள்ளோம். பார்க்கும் போது உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். நன்றி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து