முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      தமிழகம்
Pudhucherry-2023-03-23

புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் அகவிலைப்படி 46 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடு  ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி உதவி தொகைககளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து  ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி, பயணப்படி ஆகியவை 25 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு வாடகை படி அதிகபட்சமாக எக்ஸ் வகை நகரங்களுக்கு 30 சதவிதமும், ஒய் மற்றும் இசட் வகை நகரங்களுக்கு முறையே 20 மற்றும் 10 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எக்ஸ், ஒய்  மற்றும் இசட் பிரிவு நகரங்களில் வசித்தோருக்கு முறையே 27, 18, 9 ஆகிய விழுக்காடு அளவுக்கு வீட்டு வாடைகைப்படி இருந்தது. குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சீருடை படி ஆகியவையும் 25 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதித்துறை செயலாளர் சிவக்குமார் வெளியிட்ட  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து