முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      இந்தியா
Mallikarjuna-Karke 2023 02

திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார். அதனால்தான் அவர் எப்போதும் காங்கிரசை விமர்சித்து வருகிறார் என்று கேரளாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். 

கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கு நாளை 26-ம் தேதி  ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. 

இந்த நிலையில், கேரளாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம்  கூறியதாவது: 

கிட்டத்தட்ட 10-12 மாநிலங்களுக்குப் பிரதமர் மோடி பயணம் செய்ததாகவும், அங்குள்ள வாக்காளர்களிடமிருந்து கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

 ஆனால் கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார். அதனால்தான் அவர் எப்போதும் காங்கிரசை விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் என்ற கட்சியே இல்லை என கூறிவரும் அவர், பிறகு எதற்காக எங்கள் கட்சியை பற்றி கவலைப்பட வேண்டும்? 

வெற்றிப் பெறுவோம் என பா.ஜனதாவுக்கு அதிக நம்பிக்கை இருந்தால், எதற்காக ஊழல்வாதிகளை பா.ஜ.க.வில் சேர்க்கிறீர்கள்? அவர்கள் காங்கிரசிலோ அல்லது வேறு ஏதாவது கட்சியிலோ இருந்தால் அவர்களை பெரிய ஊழல்வாதிகள் எனக் கூறுவார்கள்.

பிரதமர் மோடி, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் தருவதாக கூறினார். காங்கிரஸ் கட்சியினர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவருவேன் என்றார். அந்த பணமெல்லாம் எங்கே? 

அடுத்த தேர்தலில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக கூறினார். விவசாயிகளின் இரட்டிப்பு வருமானம் எங்கே? தற்போது மோடியின் கியாரண்டி என பேசி வருகிறார். தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டோம் என்பதே மோடியின் கியாரண்டி . வாக்குகளுக்காக  இந்த விளையாட்டுகளை எல்லாம் பிரதமர் மோடி விளையாடுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து