முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      தமிழகம்
Stalin 2020 07-18

சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் 40 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தார். கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி தொடங்கி இந்த மாதம் 17-ந் தேதி வரை 20 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக சாடினார்.  பொதுக் கூட்டங்களில் பேசியது மட்டுமின்றி காலையில் நடைபயிற்சிக்கு சென்றபோதும் மக்களை சந்தித்து வாக்கு கேட்டார்.

தற்போது தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடந்து தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வட மாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டணி கட்சியினர் மாவட்ட கழக செயலாளர்கள் அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அவரது பிரசார சுற்றுப்பயண விவரம் தயாராகி வருகிறது. இதுகுறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து