முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலா வந்த இடத்தில் விபரீதம்: கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 6 மே 2024      தமிழகம்
Kumai-1 2024-05-06

Source: provided

கன்னியாகுமரி :  கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் நாகர்கோவில் உள்ள திருமண வீட்டிற்கு நேற்று முன்தினம் (மே 5) வந்தனர். அதில் 12 பேர் நேற்று காலை கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து ராஜாக்கமங்கலம் லெமூர் பீச்சுக்கு காலை 9:30 மணியளவில் வந்தனர்.

இதில் சிலர் கடலில் கால் நனைத்தபடி கடல் அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று வந்த ராட்சத அலை 6 பேரை இழுத்தது. இதில் ஒரு மாணவி உயிர் தப்பிய நிலையில் மூன்று மாணவிகள் இரண்டு மாணவர்கள் என மொத்தம் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடலில் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடற்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளும் பொது மக்களும் செல்ல வேண்டாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அறிவித்திருந்த நிலையில், நடந்துள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து