முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரதிய ஜனதாவை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீது அவதூறு பரப்புவதா? - கொல்கத்தா ஐகோர்ட்

திங்கட்கிழமை, 20 மே 2024      இந்தியா
Karnataka-high-court

Source: provided

கொல்கத்தா : திரிணாமுல் காங். மீதான அவதூறு வழக்கில் பாஜகவை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீது அவதூறு பரப்புவதா என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தொடர்பாக அவதூறான விளம்பரங்கள் வெளியிட பா.ஜ.க.வுக்கு கொல்கத்தா ஐகோர்ட் தடை விதித்துள்ளது. பா.ஜ.க. மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கொல்கத்தா ஐகோர்ட் நடவடிக்கை எடுத்துள்ளது.  ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பா.ஜ.க. விளம்பரங்கள் வெளியிடக்கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பா.ஜ.க. விளம்பரங்கள் உள்ளதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பா.ஜ.க.வுக்கு எதிரான புகார் மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. விளம்பரம் என்ற போர்வையில் பாஜகவை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீது அவதூறு புகார்களை கூறுவதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தேர்தல் விளம்பரங்களின் உண்மைத் தன்மையை உறுதிசெய்யாமல் பத்திரிகைகள் பிரசுரிக்கக்கூடாது என்றும், இந்திய பத்திரிகை கவுன்சிலின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப பத்திரிகைகள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து