முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் பெண் பலி

திங்கட்கிழமை, 20 மே 2024      தமிழகம்
Suicide 2023 04 29

மதுரை, சென்னை மணலி மாத்தூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தனச்செல்வி (60). தூத்துகுடியில் உள்ள உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக இருவரும் சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி காரில் சென்றனர். காரை சென்னையைச் சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக் (27) ஓட்டி சென்றுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழி சாலையின் பக்கவாட்டில் உள்ள 20 அடி பள்ளத்தில் கார் தலைக் குப்புற விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் மருத்துவமனைக்கு கொண்டு வழியிலேயே தனச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் கார் டிரைவர் கார்த்திக் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து