முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் பயங்கரம்: சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்ற போது விபத்து: 17 பேர் பலி

திங்கட்கிழமை, 20 மே 2024      இந்தியா
Accident-1

ராய்ப்பூர், சத்தீஸ்கரில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதால் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயமுற்று, மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டத்தில், சரக்கு வாகனத்தில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 10 பேர் பலத்த காயமுற்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது நிலைமை மோசமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், சரக்கு வாகனம் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப்படும் என உறுதி அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து