முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வியாழக்கிழமை, 23 மே 2024      இந்தியா
rain 2023-05-25

Source: provided

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாகவும், கேரள மாநிலத்தில் வான் பரப்பில் நிலவும் சூறாவளி சுழற்சி காரணமாகவும் அம்மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. திருச்சூர் மாவட்டத்தை தொடர்ந்து எர்ணாகுளம் மாவட்டம் மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொச்சி நகரில் சாலைகளில் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது. கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) 9 ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீதம் உள்ள 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை முதல் மிகக் கனமழையைக் குறிக்கிறது. அதே சமயம் ஆரஞ்சு அலர்ட் என்றால் 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையிலான மிகக் கனமழையைக் குறிக்கிறது, மேலும் மஞ்சள் அலர்ட் என்றால் 6 செ.மீ. முதல் 11 செ.மீ. வரை பெய்யும் மழையை குறிக்கிறது.

இந்நிலையில் ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கையைத் தொடர்ந்து கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (கேஎஸ்டிஎம்ஏ) மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. மேலும், மாநிலத்தின் 610 கிமீ கடற்கரையோரத்தில் கடல் சீற்றங்களைத் தடுக்க உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் இதுவரை மழை பாதிப்புக்கு 4 பேர் உயிரிழந்துள்ளதாக கேஎஸ்டிஎம்ஏ தெரிவித்துள்ளது. மழை காரணமாக பரவும் தொற்றுநோய்களைக் கண்டறிந்து தடுக்க அம்மாநில சுகாதாரத் துறை, கட்டுப்பாட்டு அறையைத் திறந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து