முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-ம் கட்ட தேர்தலில் 62.20 சதவீத வாக்குகள் பதிவு 3 நாட்களுக்கு பிறகு அறிவிப்பு

வியாழக்கிழமை, 23 மே 2024      இந்தியா
Electronic-Machine 2023-10-

Source: provided

புதுடில்லி:பாராளுமன்ற மக்களவை தேர்தலில் 5ம் கட்ட தேர்தலில் 62.20 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.

ஏழு கட்டங்களாக நடைபெறும் பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.6-ம் கட்டமாக 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்றுடன் (மே.23) ஒய்ந்தது. இந்நிலையில் கடந்த 20-ம் தேதி ஐந்தாம் கட்டமாக 8 மாநிலங்களில் 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வி.ஐ.பி. வேட்பாளர்களான ராகுல், ராஜ்நாத், ஸ்மிருதி இரானி போன்றவர்கள் போட்டியிடுவதால் முக்கியத்துவம் பெற்றது.

இதில் பதிவான வாக்குகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் 62.20 சவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்திலும் குறைந்தபட்சமாக பீஹாரிலும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மாநிலங்கள் வாரியாக பதிவு விவரம்: பீகார்: 56.76 சதவீதம், மஹாராஷ்டிரா : 56.89 சதவீதம், மேற்குவங்கம்: 78.45 சதவீதம், ஓடிசா: 73.05 சதவீதம், ஜார்க்கண்ட் : 63. 21 சதவீதம், ஜம்மு காஷ்மீர்: 59.30 சதவீதம், லடாக் : 71.82 சதவீதம், உ.பி., 58.02 சதவீதம் பதிவாகியுள்ளது. மீதம் 6, 7-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (மே 25), ஜூன் 01 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. ஜூன் 4-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து