முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோப்பையை வெல்லப்போவது யார்? - ஐ.பி.எல். இறுதி போட்டியில் இன்று கொல்கத்தா-ஐதராபாத் பலப்பரீட்சை

சனிக்கிழமை, 25 மே 2024      விளையாட்டு
Kolkata-Hyderabad 2024-05-2

Source: provided

சென்னை : நடப்பு ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார் என்பது இன்று தெரிய வரும். இன்று சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2-வது தகுதிச்சுற்று...

முன்னதாக நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற 2-வது தகுதி ஆட்டத்தில், டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீசத் தீர்மானித்தது. ஐதராபாத் இன்னிங்ஸில் அபிஷேக் சர்மா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து ராகுல் திரிபாதி, டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 42 ரன்கள் சேர்க்க, திரிபாதி வெளியேற்றப்பட்டார். அவர் அதிரடியாக 15 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 37 ரன்கள் விளாசினார்.

6-வது வீரரான.... 

4-வது பேட்டராக வந்த எய்டன் மார்க்ரம், 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ஹென்ரிக் கிளாசென் நிதானமாக ரன்கள் சேர்க்கத்தார். ஹெட்டுடனான அவரது பார்ட்னர்ஷிப் 4-வது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தது. ஹெட் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்களுக்கு வீழ்ந்தார். 6-வது வீரரான நிதீஷ்குமார் ரெட்டி 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த அப்துல் சமத் டக் அவுட்டாகினார். இம்பாக்ட் பிளேயராக ஷாபாஸ் அகமது களம் காண, அதுவரை ரன்கள் சேர்த்த கிளாசென் 34 பந்துகளில் 4 சிக்ஸர்கள் உள்பட 50 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

2 விக்கெட்டுகள்... 

அப்போது கேப்டன் பேட் கம்மின்ஸ் விளையாட வர, அகமது 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு நடையைக் கட்டினார். கடைசி விக்கெட்டாக ஜெயதேவ் உனத்கட் 5 ரன்கள் அடித்திருந்தார். ஓவர்கள் முடிவில் கம்மின்ஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டிரென்ட் போல்ட் டாப் ஆர்டரிலும், ஆவேஷ் கான் லோயர் ஆர்டரிலும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்த, சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

ஐதராபாத் வெற்றி...

பின்னர் 176 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் சேர்க்க, டாம் கோலர் 10, கேப்டன் சஞ்சு சாம்சன் 10, ரியான் பராக் 6, ரவிச்சந்திரன் அஸ்வின் 0, ஷிம்ரன் ஹெட்மயர் 4, ரோவ்மென் பவல் 6 என விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிந்தன. 

ஓவர்கள் முடிவில், மிடில் ஆர்டரில் வந்த துருவ் ஜூரெல் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் விளாசியும், டிரென்ட் போல்ட் 0 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் ஷாபாஸ் அகமது 3, அபிஷேக் சர்மா 2, பேட் கம்மின்ஸ், நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறியது. இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ஐதராபாத்.

டாப் இரண்டு வீரர்கள்...

2021, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதே போல் 2016 ஆம் ஆண்டு ஐதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால், நடப்பு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட டாப் 2 வீரர்களின் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன. அவர்கள் ஆஸ்திரேலிய வீரர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர்.  ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் டைரஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் இவ்வளவு தொகைக்கு ஏலம் போவது முதல் முறையாகும். இதற்கு முன்னதாக முன்னதாக பேட் கம்மின்சை 20.50 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.

ஒரு வீரர் கூட இல்லை...

ஐபிஎல் தொடர் முடிவடைந்த ஒரே வாரத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்ற 15 வீரர்களில் ஒருவர் கூட ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியும் ஐதராபாத் அணியும் இன்று மோதுகின்றன. ஐதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள வருண் சக்கரவர்த்தி மற்றும் ஐதராபாத் அணியில் உள்ள நடராஜன் ஆகியோர் சிறப்பாக விளையாடியுள்ள போதும் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து