எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஒரு கோளுக்கு அடுத்து இன்னொரு கோள் என்று அடுக்கி வைக்கப்பட்டது போல நம் கண்களுக்கு தெரியும் நிகழ்வு கோள்களின் தொடர்வரிசை நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வை வரும் ஜூன் 3, 4-ம் தேதிகளில் கிழக்கு திசையில் சூரியன் உதிப்பதற்கு முன்னர் அதிகாலையில் அடிவானில் சூரியனுக்கு மேல் பக்கத்தில் காணலாம். வியாழன், புதன், செவ்வாய், வருணன், சனி, நெப்டியூன் ஆகிய 6 கோள்களையும் ஒரே வரிசையில் பார்க்க முடியும்.
அதேநேரம், கோள்கள் ஒரே நேர்கோட்டில் காணப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பூமியில் இருந்து பார்க்கும் போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை நமக்கு தருகிறது.
ஜூன் 3-ம் தேதி அதிகாலையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இந்த 6 கோள்களையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம். காற்று மற்றும் ஒளி மாசுபாடு இல்லாத, அடிவானம் மறைக்காத சற்று உயரமான இடத்தில் அமர்ந்துகொண்டு பார்ப்பது மிகவும் சிறந்தது.
ஜூன் 3-ம் தேதி சனிக்கோளுக்கு கீழேயும், 4-ம் தேதி செவ்வாய் கோளுக்கு கீழேயும் பிறைச் சந்திரனையும் காணலாம். இது கண்ணுக்கு விருந்தாக அமையும். இதுபோன்ற 5 அல்லது 6 கோள்களின் அணிவகுப்பு மீண்டும் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி, 2025 ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களிலும் நடைபெறும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


