முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது: புஸ்ஸி ஆனந்த் தகவல்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      தமிழகம்
Bussy-Anand 2023-11-03

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி என்பது நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் விஜய் அறிவிப்பார் என்றும் மதுரையில் த.வெ.க.மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்- யின் 50 வது பிறந்தநாள் விழாவையொட்டி மதுரை ஓடைப்பட்டியில் 550 நபருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி என்பது நடைபெற்று வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நான் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் எங்களுடைய முகவரி தளபதி தான். அரசியல் தொடர்பான கருத்துக்களை அவர் தான் தெரிவிப்பார். விஜயின் ஆலோசனை இல்லாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது செய்யவும் மாட்டோம். விஜய் மிக விரைவில் மக்களை நேரடியாக சந்திக்க உள்ளார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து