Idhayam Matrimony

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் டி.டி.வி.தினகரன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு

புதன்கிழமை, 21 ஜனவரி 2026      தமிழகம்

சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளதாக மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் டி.டி.வி.தினகரனின் வருகை தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக டி.டி.வி.தினகரன் சென்னையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற டி.டி.வி. தினகரன், பா.ஜ.க. தலைவர்களை சந்தித்தார். தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை அவர் சந்தித்தார். அப்போது டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். இதையடுத்து பா.ஜ.க. - அ.ம.மு.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்ததில் மகிழ்ச்சி. தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார். தமிழக மக்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் தி.மு.க. தாக்குகிறது. டி.டி.வி.தினகரனின் வருகை தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து