Idhayam Matrimony

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரன்-இ.பி.எஸ். சந்திப்பார்களா..?

புதன்கிழமை, 21 ஜனவரி 2026      அரசியல்
TTV 2023 01 20

சென்னை, மத்திய அமைச்சர்  பியூஷ் கோயலை டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணைந்திருப்பது அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு அதிகாரமும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.

ஆனால், நேற்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குவது அ.தி.மு.க.தான். முதல்வர் வேட்பாளரும் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது, எடப்பாடி பழனிசாமியை டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணையாமல், மத்திய அமைச்சர்  பியூஷ் கோயலை சந்தித்து இணைந்திருப்பது தமிழக அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே, அ.தி.மு.க. இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் என்று கூறிவந்த டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றே கடுமையாக விமர்சித்தார். அதன்பிறகு, பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அதனால், அவரது பேச்சில் மாற்றம் ஏற்பட்டது. இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணியிலும் அவர் இணைந்திருக்கிறார்.

உடனே, அ.தி.மு.க. மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோரை அழைத்து அவசர ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு டி.டி.வி.தினகரனை வரவேற்றுள்ளார். பதிலுக்கு டி.டி.வி.தினகரனும் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அரசியலில் எலியும், பூனையுமாக இருந்தவர்கள் இப்படி ஒரே நாளில் நட்பு பாராட்டும் அளவுக்கு மாறியிருப்பது, அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பதையே காட்டுகிறது. இனி, எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி.தினகரனும் சந்தித்து பேசுவார்களா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. நெடுநாள் பகையும் முடிவுக்கு வருமா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தேர்தல் சமயத்தில் ஏற்படும் கூட்டணி மட்டும்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று காலை எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் மத்திய அமைச்சர்  பியூஷ் கோயலை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை டி.டி.வி.தினகரனுடன் பா.ஜ.க.வே நடத்திக்கொள்ளட்டும் என்றும், தங்களுக்கு வழங்கப்படும் தொகுதிகளில் இருந்து டி.டி.வி.தினகரனுக்கான இடங்களை வழங்கிக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து