Idhayam Matrimony

தே.மு.தி.க. யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

புதன்கிழமை, 21 ஜனவரி 2026      தமிழகம்      அரசியல்
Pramalatha

சென்னை, தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில், அதில் பாமகவின் அன்புமணி தரப்பு இணைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் இணைந்துள்ளது.கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் செய்தியாளர்களுடன் பேசியபோது இதனை உறுதிப்படுத்தினார். 

தே.மு.தி.க.வும் இந்தக் கூட்டணியில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், தங்களுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை என்று பிரேமலதா கூறியுள்ளார். இது தொடர்பாக பிரேமலதா கூறியதாவது:- யாருடன் கூட்டணி அமைப்பது என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தற்போது வரை பா.ஜ.க.விடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. பியூஷ் கோயல் எதற்காக சென்னை வந்துள்ளார் என்பதுகூட எங்களுக்குத் தெரியாது. 24-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை பிரசாரம் செய்ய இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து தெரிவிப்போம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து