எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதால் கட்சிக்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
இதனால், இந்த முறை நான்கு முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது. ஜனநாயகன் படப் பிரச்சினை, சி.பி.ஐ. விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் சந்தித்து வரும் நிலையில், த.வெ.க.விற்கு பொதுச் சின்னம் கிடைக்குமா? என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் இடையே விவாதம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், த.வெ.க.விற்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுச் சின்னம் கோரி த.வெ.க. அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாகவும், அங்கீகரிக்கப்படாத கட்சியான த.வெ.க., தேர்தல் ஆணைய விதிகளின்படி கணக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே சின்னம் ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. த.வெ.க. கொடுத்துள்ள பொதுவான 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலில் ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் ஆகிய சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால், இதில் ஏதாவது ஒரு சின்னம் ஒதுக்கப்படலாம் என்று த.வெ.க.வினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


