எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழக சட்டசபைக்கு அடுத்த 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வைத்திலிங்கம் ராஜினாமா: எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்ந்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, ஆலங்குளம் தொகுதி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். அதேபோல், கோபி செட்டிப்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
மேலும், வால்பாறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி மரணம் அடைந்ததால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. சேந்தமங்கலம் தொகுதி பொன்னுச்சாமியும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி காலமானார். இதனால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபைக்கு அடுத்த 2 மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால், எந்தத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. எம்.எல்.ஏ. காலியிடமும் 5 ஆக உயர்ந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


