முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு நிதி அளிக்கும் கோப்பில் முதல் கையெழுத்திட்ட பிரதமர் நரேந்திரமோடி : 9.3 கோடி பேருக்கு ரூ.20 ஆயிரம் கோடி விநியோகம்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
Modi 2024-06-10

Source: provided

புதுடெல்லி : 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி, நேற்று (திங்கட்கிழமை) தனது அலுவலகத்தில் முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். விவசாயிகள் நலன் சார்ந்த திட்டம் தொடர்பான கோப்பில் தனது முதல் கையொப்பத்தை இட்டார்.  9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் ரூ.20,000 கோடி விடுவிக்கும் கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

72 பேர் அமைச்சர்கள்...

முன்னதாக நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அன்று அவருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அன்றைய தினம்மொத்தம் 72 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். தேர்தலில் 240 இடங்களில் வென்ற பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்த முறை ஆட்சி அமைத்து உள்ளது.

முதல் கையெழுத்து...

பிரதமர் மோடி நேற்று தனது அலுவலகத்துக்கு சென்றதும் முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் ‘பி.எம் கிசான் நிதி’ எனப்படும் விவசாயகள் நலன் சார்ந்த திட்டத்தில் முதலாவதாக கையொப்பமிட்டார். “இதன் மூலம் மொத்தம் 9.3 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள். ரூ.20,000 கோடி இதில் விநியோகம் செய்யப்படும். வேளாண் மக்களின் நலனுக்காக எங்களது அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். அந்த வகையில் அது சார்ந்த கோப்பில் முதல் கையெழுத்திடுவது தான் சரியாக இருக்கும். வரும் நாட்களில் வேளாண் மக்களுக்காகவும், வேளாண் துறை சார்ந்தும் கூடுதலாக பணியாற்ற உள்ளோம்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மக்களுக்கு சேவை...

முன்னதாக நேற்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவஇல், 140 கோடி இந்திய மக்களுக்கு சேவையாற்ற தான் தயாராக உள்ளதாகவும். இந்தியாவை புதிய வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் தனது அமைச்சரவை செயல்படும் என்றும். இளமை மற்றும் அனுபவம் கலந்த வகையில் அமைச்சரவை சகாக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து