முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ராகுல் காந்தி இன்று வயநாடு செல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2024      இந்தியா
Rahul 2024-05-27

Source: provided

திருவனந்தபுரம் : வயநாடு தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்வதற்காக ராகுல் காந்தி இன்று வயநாடு செல்கிறார். அப்போது, வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்வது குறித்த தகவலை அவர் வெளியிடுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும்  வெற்றி பெற்றார். வயநாட்டில் 3.64 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜாவை தோற்கடித்தார். 

இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் இதில் ஏதாவது ஒரு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வார இறுதிக்குள் இது தொடர்பான முடிவை பாராளுமன்ற சபாநாயகரிடம் தெரிவிக்க அவர் தீர்மானித்துள்ளார்.

எந்தத் தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப் போகிறார் என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. உத்தரபிரதேசத்தில் தற்போது காங்கிரசுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் ரேபரேலி தொகுதியை அவர் தக்க வைப்பார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் மேலிடமும் இதையேதான் விரும்புகிறது. 

இதனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்யலாம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று கேரள காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர்.  

வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் திருச்சூரில் தோல்வியடைந்த கருணாகரனின் மகன் கே. முரளீதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ராகுல் காந்தி இன்று கேரளாவுக்கு செல்கிறார். மலப்புரத்திலும், வயநாடு மாவட்டம் கல்பெட்டாவிலும் அவர் வாக்காளர்களை சந்திக்கிறார். 

 ராகுல் காந்தியை வரவேற்பதற்காக வயநாடு மற்றும் மலப்புரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து