முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையின் எதிர்காலத்திற்கு அதிபர் தேர்தல் முக்கியமானது: விக்ரமசிங்கே

புதன்கிழமை, 12 ஜூன் 2024      உலகம்
Ranil 2023 05 02

Source: provided

கொழும்பு : அதிபர் தேர்தல் இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என அதிபர் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளித்தது. தற்போது அதில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வருகிறது. அதிபராக இருக்கும் விக்ரமசிங்கே மறுசீரமைப்பு செய்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தனால் அதிபர் தேர்தல் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என விக்ரமசிங்கே கட்சி பரிந்துரை செய்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் இது சட்ட அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்தது. 

தேர்தல் ஆணையமும் செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 16-ம் தேதி வரைக்குள் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்தது. இந்த நிலையில் அதிபர் தேர்தல் இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என அதிபர் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், வரவிருக்கும் அதிபர் தேர்தல் என்னைப் பற்றிய தனிநபர் தேர்தல் அல்ல. இது என்னுடைய வெற்றி அல்லது தோல்வி பற்றியது அல்ல. இது நாட்டின் வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிப்பதாகும்.

இந்த தேர்தல் தனி நபர்களை தேர்வு செய்யும் சாதாரணமான தேர்தல் அல்ல. நாட்டின் வளர்ச்சிக்காக மிகவும் பயனுள்ள சிஸ்டத்தை தேர்வு செய்வது பற்றியது. தற்போதைய அணுகுமுறையின் தகுதியை நீங்கள் நம்பினால், அதன்படி தொடரலாம். இவ்வாறு விக்ரமசிங்கே தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து