முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி7 மாநாடு: அதிபர் ஜோ பைடனை வரவேற்ற இத்தாலி பிரதமர் மெலோனி

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      உலகம்
Joe-Biden--Italy-PM-2024-06

ரோம், ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்

அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி 7 ஆகும்.ஜி 7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு நேற்று முதல் 15-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஜி7 மாநாட்டில் பங்கேற்கின்றனர். ஜி7 மாநாட்டில் உரையாற்றுவதுடன் ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.இதேபோல், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி அதிபர் ஆகியோரையும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து