எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் வழிகாட்டுதல் குழுவில் (மார்க்தர்சக் மண்டலில்) பிரதமர் நரேந்திர மோடியும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடம் பெற்றுள்ளனர். குழுவில் இவர்கள் இருவரும் இடம் பெற்றிருக்கும் தகவல் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bjp.org/ -ல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் குழுவில் இதற்கு முன்னர், கட்சிப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். குழுவில் மோடியும் ராஜ்நாத் சிங்கும் எப்போது சேர்க்கப்பட்டனர் என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. எனினும், இவர்கள் இருவரும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பது பற்றி தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
மார்க்தர்சக் மண்டல் பக்கத்தில் https://www.bjp.org/margadarshak-mandal பக்கத்தில் படங்களுடன் பிரதமர் மோடி, எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங் இடம் பெற்றுள்ளனர். ‘இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவு பெறும். இதைத் தொடர்ந்து, தீவிர அரசியலிலிருந்து மோடி விலகுமாறு அறிவுறுத்தப்படுவார். உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமராவார்’ என்று தேர்தல் பிரசாரத்தின்போது ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கேஜரிவால் குறிப்பிட்டிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |