முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2024      தமிழகம்
Vikravandi 2024-05-14

Source: provided

விழுப்புரம் : விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. 

விழுப்புரம் மாவட்டம் பிடாகத்தை அடுத்த அத்தியூர்திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் நா.புகழேந்தி(71). விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

இதையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 6 மாதத்திற்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். 

அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து தீவிர பணியில் இறங்கி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை  10-ம் தேதி நடைபெற உள்ளது.

இதன் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. 

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் 21-ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள், 24-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுவை வாபஸ் பெற 26-ம் தேதி கடைசி நாளாகும். 

வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் என மொத்தம் 5 பேர் மட்டுமே தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்றும் மற்ற அனைவரும் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம்  நிபந்தனை விதித்துள்ளது.

இதனால் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளே யாரும் செல்லாத அளவிற்கு எல்லைக்கோடுகள் வரையப்பட்டுள்ளதோடு அங்கு போலீசார், பேரிகார்டு மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து