முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத்தில் பலியானோர் உடல்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி : சொந்த ஊர்களுக்கு உடல்கள் அனுப்பி வைப்பு

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2024      இந்தியா
Senchi-Mastan 2024-05-14

Source: provided

கொச்சி : கொச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குவைத் அடுக்கு மாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து உயிரிழந்த தமிழர்களின் சொந்த ஊர்களுக்கு உடல்களை அனுப்பி வைத்தனர். 

குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய ராணுவ விமானத்தின் மூலம் கொச்சி கொண்டு வரப்பட்டன. இதில், கேரளாவைச் சேர்ந்த 23 பேர், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர், ஆந்திராவைச் சேர்ந்த மூவர், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரின் உடல்கள் கொச்சியில் ஒப்படைக்கப்பட்டது. எஞ்சியுள்ள உடல்களை டெல்லி விமான நிலையத்துக்கு கொண்டு சென்று, அங்கிருந்து அவர்களின் ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கொச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 31 பேரது உடல்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங், சுரேஷ்கோபி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். 

கொச்சியில் இருந்து தமிழகம், ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அந்தந்த மாநில அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் உயிரிழந்தோர் உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.

இதனிடையே தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்கள் தனித்தனி ஆம்புலன்ஸ் வாகனங்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் கொச்சி சென்றுள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடல்களை அனுப்ப ஏற்பாடு செய்தார். 

அதன்படி, ஒவ்வொரு ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், அவர்கள் செல்ல வேண்டிய வழித்தடம் – ரூட் மேப் விளக்கப்பட்டிருந்தது. உறுதுணையாக காவல்துறையினரும் உடன் சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து