முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி குறித்து பயிற்சியாளர்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      விளையாட்டு
Virat-Kohli 2023-10-02

Source: provided

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் பத்திரிகையாளர்களை சந்திக்க வரும்போதெல்லாம் விராட் கோலி குறித்து என்னிடம் கேள்வி கேட்கப்படுகிறது. அது எனக்கு பிடித்திருக்கிறது. விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஐபிஎல் தொடரிலிருந்தே அவர் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். 

ஓரிரு முறை ஆட்டமிழந்தது பெரிய அளவில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு தயாராக இருக்கிறார். அவரிடமிருந்த பல சிறந்த இன்னிங்ஸ்களை நாம் பார்த்துள்ளோம் என்றார். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோகித், கோலியின் எதிர்காலம் ?

முக்கியமான போட்டிகளில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நன்றாக விளையாடினால், லீக் சுற்றில் எடுத்த ஸ்கோர்கள் பெரிதாக பேசப்படாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றவர்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களது பரந்த அனுபவத்தின் காரணமாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முக்கியமான போட்டிகளில் அவர்களது அனுபவம் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கும். அதனால், அவர்கள் ஃபார்மில் இல்லாமலிருப்பது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த போவதில்லை. 

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் என்ன என்பது இந்திய அணித் தேர்வுக் குழுவிடமும், சம்பந்தப்பட்ட வீரர்களிடமும் கேட்கப்பட வேண்டிய கேள்வி. இந்தியத் தேர்வுக்குழு உறுப்பினர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கிடையில், நமக்கு நிறைய நாள்கள் இருக்கின்றன என்றார்.

வங்கதேசமா - நெதர்லாந்தா?

குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் தகுதி பெற்றுள்ளன. குரூப் சி பிரிவில் ஆப்கானிஸ்தானும், மேற்கிந்தியத் தீவுகளும் தகுதி பெற்றுள்ளன. குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்க அணி தகுதி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது அணியாக எந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குரூப் டி பிரிவில் நேபாளம் மற்றும் இலங்கை அணிகள் ஏற்கனவே உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டன. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான போட்டியில் வங்கதேசமும், நெதர்லாந்தும் இடம்பெற்றுள்ளன.

வங்கதேசதம் அதன் கடைசி லீக் போட்டியில் நேபாளத்தை வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். நேபாளத்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்து இலங்கைக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து தோல்வியடைந்தாலும், வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.நெதர்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற நல்ல நெட் ரன் ரேட்டில் இலங்கை அணியை வெற்றி பெற வேண்டும். அதேசமயம், வங்கதேச அணியும் நேபாளத்திடம் தோல்வியடைய வேண்டும். இந்த இரண்டும் நடைபெறும் பட்சத்தில், நெதர்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்.

ஐ.சி.சி. மீது கடும் விமர்சனம்

தார்ப்பாய் இல்லாத மைதானங்களில் போட்டியை நடத்தாதீர்கள் என்று ஐ.சி.சி.-யை சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது., மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தேவையான வசதிகள் இல்லாத மைதானத்தில் ஐ.சி.சி. போட்டியை நடத்தக் கூடாது. நீங்கள் பிட்ச்சை மட்டும் மூடி விட்டு மற்ற பகுதிகளை ஈரமாக விட முடியாது என்று கூறினார். 

அதே போல மைக்கேல் வாகன் ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு., மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தார்ப்பாய் எப்படி இல்லாமல் போகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் போட்டிகளால் அனைத்து பணமும் கிடைக்கிறது. அதையும் தாண்டி ஈரப்பதமான மைதானத்தால் போட்டி ரத்து செய்யப்படுகிறது என்று கூறினார்.

23-வது நொடியில் முதல் கோல் 

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐரோப்பியாவை சேர்ந்த 24 அணிகள் விளையாடுகின்றன. இதில் இத்தாலி மற்றும் அல்பேனியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  இந்த போட்டி தொடங்கிய 23 நொடியிலேயே அல்பேனிய வீரர் நெடிம் பஜ்ராமி தனது அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். 

 

இது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையாக அமைந்தது.  இதைத் தொடர்ந்து இத்தாலி அணியின் அலெசாண்ட்ரோ பஸ்டோனி போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் தனது அணிக்காக கோல் அடித்தார். இது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிவேக கோல் என்ற சாதனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து