முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுவானில் விமான எஞ்சின் செயலிழப்பு: அவசர அவசரமாக ஆஸ்திரேலியா விமானம் தரையிறக்கம்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      உலகம்
Australia 2024-06-17

Source: provided

வெலிங்டன் : நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு வெர்ஜீன் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

குயின்ஸ்டவுனில் இருந்து விமானம் புறப்பட்டு 50 நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, விமான எஞ்சினில் திடீரென தீ பற்றியது. இதனால், விமானத்தில் ஒரு எஞ்சின் முழுவதும் செயல் இழந்தது. இதையடுத்து, விமானம் அவசர அவசரமாக குயின்ஸ்டவுன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் மெல்போர்ன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது அதன் எஞ்சின் மீது பறவைகள் மோதியதாலே தீ பற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து