முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 உலகக்கோப்பை தொடர்: சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி மோதும் போட்டி அட்டவணை : தனது முதல் போட்டியில் ஆப்கானை எதிர்கொள்கிறது

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      விளையாட்டு
INDIA 2024-06-17

Source: provided

நியூயார்க் : டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி மோதும் போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி.

வரும் 19-ம் தேதி முதல்....

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 1- ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது. லீக் சுற்றில் தங்களது பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 8 சுற்று வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

தலா 1 முறை மோதும்...

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1 பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுடன் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் 2 பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதும். முடிவில் தங்களது பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

4 அணிகள் முன்னேறும்...

சூப்பர் 8 சுற்று முடிவில் அரையிறுதி சுற்றுக்கு நான்கு அணிகள் முன்னேறும். அரையிறுதி சுற்றின் இரண்டு போட்டிகளும் ஜூன் 27 ஆம் தேதியே நடைபெறுகிறது. முதல் போட்டி காலையிலும், இரண்டாவது போட்டி இரவிலும் நடைபெறுகிறது. அரையிறுதி சுற்றில் வெற்றி பெறும் இரு அணிகள் ஜூன் 29 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாட உள்ளன. 

சூப்பர் 8 சுற்று முழு விவரம்:

1) ஜூன் 20 காலை இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ்.

2) ஜூன் 20 இரவு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா.

3) ஜூன் 21 காலை ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம்.

4) ஜூன் 21 இரவு இங்கிலாந்து VS தென் ஆப்பிரிக்கா.

5) ஜூன் 22 காலை அமெரிக்கா VS வெஸ்ட் இண்டீஸ்.

6) ஜூன் 22 இரவு இந்தியா VS வங்காளதேசம்.

7) ஜூன் 23 காலை ஆப்கானிஸ்தான் VS ஆஸ்திரேலியா.

8) ஜூன் 23 இரவு அமெரிக்கா VS இங்கிலாந்து.

9) ஜூன் 24 காலை வெஸ்ட் இண்டீஸ் VS தென் ஆப்பிரிக்கா.

10) ஜூன் 24 இரவு ஆஸ்திரேலியா VS இந்தியா.

11)ஜூன் 25 காலை ஆப்கானிஸ்தான் VS வங்காளதேசம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து