முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலை ரூ.1.15 கோடி மட்டும்: உலகின் முதல் பறக்கும் கார் சீனாவில் அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      உலகம்
Car 2024-06-18

Source: provided

பெய்ஜிங் : உலகின் முதல் பறக்கும் காரை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.1.15 கோடி என்கின்றனர்.

இன்றைய சூழலில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வாகனத்தில் செல்வதற்குள் போதும்போதும் என்ற நிலைக்கு சென்றுவிடுகிறோம். காரணம், பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் நெரிசல் அதிகரித்து, பயணத்தை தாமதப்படுத்துவதுடன், சலிப்படைய செய்கிறது. பயணத்தை எளிதாக்கும் வகையில், பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.

அந்த போட்டியில் தற்போது சீனா முந்தியுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான 'எக்ஸ்பெங்', உலகிலேயே முதல் பறக்கும் பேட்டரி காரை தயாரித்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்தை 2022ம் ஆண்டு துபாயில் நடத்தி வெற்றிப்பெற்றது. ஹெலிகாப்டரின் தொழில்நுட்பத்தில், கார் போன்ற வடிவத்தில் இந்த பறக்கும் இந்த காருக்கு எக்ஸ்பெங், 'எக்ஸ்2' என பெயரிடப்பட்டுள்ளது.

5.172 மீட்டர் நீளமும், 5.124 மீட்டர் அகலமும், 1.362 மீட்டர் உயரமும் கொண்ட இந்த கார், 680 கிலோ எடைக்கொண்டது. அதிகபட்சம் 160 கிலோகிராம் எடையை தாங்கி பறக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.1.15 கோடி இருக்கும் என்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து