Idhayam Matrimony

கோவை வேளாண் பல்கலை.யில் தரவரிசை பட்டியல் வெளியீடு

புதன்கிழமை, 19 ஜூன் 2024      தமிழகம்
Kovai 2024-06-19

Source: provided

கோவை : கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நேற்று மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகம் மற்றும் வேளாண்மை பிரிவு, அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடந்தது.

நடப்பு கல்வியாண்டில் வேளாண் பல்கலையில் 14 இளம் அறிவியல் பாடப்பிரிவு, 4 பட்டயப் படிப்புகளில் 5,361 இடங்களுக்கும், மீன்வளப் பல்கலைக் கழகத்தில் 6 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும் மற்றும் மூன்று தொழில் முறை பாடப் பிரிவில் 371 இடங்களும், அண்ணாமலை பல்கலைக் கழத்தில் இளம் அறிவியல் (வேளாண்மை) மற்றும் இளம் அறிவியல் (தோட்டக்கலை) பாடப்பிரிவுகளில் உள்ள 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மே 7-ம் தேதி முதல் கடந்த 12-ம் தேதி வரை பெறப்பட்டது. அதன்படி மொத்தம் 33,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 11,447 மாணவர்கள், 18,522 மாணவிகள் என29 ஆயிரத்து 969 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து மாணவர்களின் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நடப்பாண்டில் பிளஸ்-2 வில் அறிவியல் பிரிவு படித்த மாணவர்கள் 27,300 பேர் மற்றும் தொழில்முறையில் வேளாண்மை படித்த மாணவர்கள் 1,900 பேர் என மொத்தம் 29,969 மாணவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

இவர்களுக்கான தரவரிசை பட்டியல் பல்கலைக் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதில் 200-க்கு 200 மதிப்பெண்களை 4 பேரும், 199.5 மதிப்பெண் 8 பேரும், 199 மதிப்பெண்களை 10 பேரும் பெற்று உள்ளனர் என்று தெரிவித்தார். 

மேலும், நேற்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புடன் சேர்க்கையும் நடந்தது. இதனை தொடர்ந்து ஆன்லைன் முறையில் கலந்தாய்வு வரும்  22, 23, 24 கலந்தாய்வு நடைபெறுகிறது. 

இந்த கலந்தாய்வின் போது மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரி மற்றும் துறைகளில் மாற்றங்கள் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். மேலும், நடப்பாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி வழக்கம் போல் திறக்காமல் புதுமையான முறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அழைத்து அவர்களுக்கு வேளாண்மை குறித்து கள நிலவரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும். இந்த பயிற்சி மூலம் மாணவர்களுக்கு வேளாண் படிப்பு குறித்த புரிதல் ஏற்படும். 

இதனை தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் வருகிற செப்டம்பர் 15-ம் தேதி திறக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து