முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஷ சாராய உயிரிழப்பு விவகாரம்: வி.சி.க. போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      தமிழகம்
Kallakurichi 2024-06-24

சென்னை, விஷ சாராய மரண விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பான வி.சி.க. போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷசாராயம் அருந்தியதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசை கண்டித்து அதிமுக, பாஜக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தை அறிவித்தன. ஆனால், இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தார்கள். இருப்பினும் தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களுக்கு முன் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. நேற்று அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்திருந்த போராட்டத்திற்கு சென்னை போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நேற்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து