முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை, திருச்சி விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      தமிழகம்
Air

கோவை, கோவை, திருச்சி விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பிற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை விமான நிலையத்திற்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் மூலம் விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டின் பல்வேறு விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ள நிலையில், கோவை விமான நிலையத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவையை அடுத்து திருச்சி விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் சென்னை மண்டல அலுவலகத்துக்கு இமெயில் மூலம் வந்தது. இது குறித்து சென்னை மண்டல அலுவலக அதிகாரிகள் திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து வெடிகுண்டு கண்டறியும் குழு அமைத்து சிஐஎஸ்எப் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அலுவலர்கள் திருச்சி விமான நிலையத்தில் நேற்று காலை சோதனை நடத்தினர். அதில் எதுவும் சிக்கவில்லை. இதனால் திருச்சி விமான நிலையத்தில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து