எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்று வரும் அரையிறுதி ஆட்டத்தில் மெத்வதேவ் - அல்காரஸ் ஆகியோர் மோதுகின்றனர். இந்த நிலையில், இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கண்டு ரசித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
அமைச்சர் உதயநிதி வாழ்த்து
செஸ் கேண்டிடேட் பட்டம் வென்ற சர்வாணிகாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்ன் நேற்று நேரில் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், செஸ் விளையாட்டில் மிக இளம் வயதிலேயே' செஸ் கேண்டிடேட் மாஸ்டர் ' பட்டத்தை வென்ற அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த தங்கை சர்வாணிகாவை நேரில் வாழ்த்தினோம். உலகளாவிய போட்டிகளில் தடம் பதித்து தமிழ்நாட்டிற்கும் - இந்தியாவிற்கும் தங்கை சர்வாணிகா தொடர்ந்து பெருமை சேர்த்து வருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.தங்கை சர்வாணிகாவின் வெற்றிப் பயணம் தொடர என் அன்பும், வாழ்த்தும்.என தெரிவித்துள்ளார்.
எதிர்கொள்ளும் வீராங்கனைகள்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் குரூப் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து எதிர்கொள்ளும் வீராங்கனைகளின் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மொத்தம் 39 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் ஒவ்வொரு குழுவிலும் மூன்று வீராங்கனைகள் என மொத்தம் 13 குழுக்களாக வீராங்கனைகள் பிரிக்கப்பட்டுள்ளனர்.
பி.வி.சிந்து, எஸ்டோனியா நாட்டை சேர்ந்த கிறிஸ்டின் குபா மற்றும் மாலத்தீவின் பாத்திமத் நபாஹாவை எதிர்கொள்கிறார். தரவரிசையில் கிறிஸ்டின் குபா 75வது இடத்திலும் , பாத்திமாத் 111வது இடத்திலும் உள்ளனர். பி.வி.சிந்து கடந்த 2016ம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கமும், கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.இம்முறையும் பதக்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பாரா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஒலிம்பிக் போட்டிகள் ஒளிபரப்பு
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிஜிட்டல் தள ஸ்ட்ரீமிங் பார்ட்னராக ஜியோசினிமா உள்ளது.
இந்த நிலையில, இந்தியாவில் ஜியோ சினிமா செயலியில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது . ஆங்கிலம், இந்தி , தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 4k தொழில்நுட்பத்தில் அனைத்து போட்டிகளையும் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ சினிமா கடந்த இரண்டு வருடங்களாக ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்தது . இந்த சீசனில் 62 கோடி பார்வைகளைப் பெற்று ஜியோ சினிமா சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோலி, ரோகித்துக்கு பாராட்டு
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டபோது இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியதாக வி.வி.எஸ். லட்சுமணன் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்து போராடி வென்றது இந்திய அணியின் கேரக்டரை காட்டுவதாக அவர் பாராட்டியுள்ளார். அத்துடன் கோப்பையை வென்று ராகுல் டிராவிட் கையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கொடுத்தது நெஞ்சை தொடும் செயலாக அமைந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
மொத்த நாடும் அந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந்தது. குறிப்பாக கடந்த உலகக்கோப்பையில் நாம் அபாரமாக விளையாடியும் பைனலில் தோல்வியை சந்தித்தோம். ராகுல் டிராவிட்டுடன் நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். ஆனால் கடைசிப் பந்து வீசியதும் அவர் தன்னுடைய உச்சகட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். அவரிடம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கோப்பையை கையில் கொடுத்தது நெஞ்சைத் தொட்ட சிறப்பான செயலாக அமைந்தது. அதை அவர் கொண்டாடிய விதம் இந்த வெற்றி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டியது" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் வருகிற 20-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்
-
சபரிமலை கோவில் சன்னிதானத்தில் கேமரா, செல்போன்களுக்கு தடை : இந்த ஆண்டு முதல் அமல்
16 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலை சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
விருதுநகரில் அ.தி.மு.க.தான் போட்டி: ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்
16 Nov 2025விருதுநகர் : விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க.தான் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
-
மகிளா வங்கியை மூடிய பா.ஜ.க. அரசு: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
16 Nov 2025சென்னை : பெண்கள் பொருளாதார வலிமை பெற, காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகிளா வங்கியை மத்திய பா.ஜ.க.
-
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று கொடியேற்றம்
16 Nov 2025திருச்சானூர் : திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது.
-
தமிழ் பட பாடலை பாடிய பீகாரின் இளம் எம்.எல்ஏ.
16 Nov 2025பாட்னா : பீகாரின் இளம் சட்டப்பேரவை உறுப்பினர் நடிகர் அஜித் படத்தின் பாடலைப் பாடியுள்ளார்.
-
மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை என் தந்தை காப்பாற்றுவார்: நிதிஷ் மகன் நிஷாந்த் உறுதி
16 Nov 2025பாட்னா : மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, பீகாரை முன்னேற்ற பாதைக்கு தனது தந்தை அழைத்துச் செல்வார் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் கூறி
-
மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்
16 Nov 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் மதுரை ஏ.சி. அணியினர் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆண்பாவம் பொல்லாதது படக்குழு
17 Nov 2025டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2025.
17 Nov 2025 -
சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்
17 Nov 2025ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’.
-
காந்தா திரைவிமர்சனம்
17 Nov 20251950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவ
-
வங்கக்கடலில் உருவாகிறது மேலும் ஒரு புயல் சின்னம் : 8 மாவட்டங்களில் இன்று கனமழை
17 Nov 2025சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவிமர்சனம்
17 Nov 2025பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
-
உண்மை சம்பவத்தை சொல்லும் தீயவர் குலை நடுங்க
17 Nov 2025அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’.
-
கும்கி 2 திரைவிமர்சனம்
17 Nov 2025நாயகன் மதி, மலை காட்டில் குழியில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றி வளர்க்கிறார். அந்த யானை ஒருநாள் திடீரென்று மாயமாகி விடுகிறது.
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: வரும் 24-ம் தேதி கொடியேற்றம்
17 Nov 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இயற்கை விவசாயிகள் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகை
17 Nov 2025கோவை : கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வருகிறார்.
-
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது : உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
17 Nov 2025சென்னை : வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர்
17 Nov 2025சென்னை : ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர்கல்வித்துறை அ
-
கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு
17 Nov 2025சென்னை : பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றம்
17 Nov 2025செம்பரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து1,200 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
சவுதியில் பேருந்து விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
17 Nov 2025துபாய் : மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் 45 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
42 இந்தியர்கள் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
17 Nov 2025புதுடெல்லி : சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 45 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பீகார் தேர்தல் வெற்றியை அடுத்து தமிழகத்திலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றிப்பெற அமித்ஷா முயற்சி
17 Nov 2025சென்னை, பீகார் தேர்தல் வெற்றியை அடுத்து தமிழகத்திலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றிப்பெற அமித்ஷா முயற்சி எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


