முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு

சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2026      தமிழகம்
Amit-Shah 2023-11-17

புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.

காரைக்காலில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார்  அப்போது பேசிய அவர், திருநள்ளாறு சனீஸ்வரர் பகவானையும், பத்ரகாளி அம்மனையும் தலைவணங்கி உரையை தொடங்குகிறேன் என்று கூறினார். உலகத்தின் மிகவும் தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்கு மன்னிப்பு கேட்கிறேன். இங்கு நான் வந்ததற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளது. மோடி - ரங்கசாமி ஆகியோர் தலைமையில் உள்ள புதுச்சேரியில் ஆட்சியில் என்ன நடந்துள்ளது என்பதே விவரிக்க வந்துள்ளேன். இரண்டாவது நோக்கம், முந்தைய ஆட்சியாளர்களின் முகத்திரையை கிழிக்க வந்துள்ளேன்.

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டம் - ஒழுங்கை சீர் செய்துள்ளோம், வளர்ச்சிப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாள்தோறும் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள். அன்றாட தாக்குதலை காங்கிரஸ் வாடிக்கையாக மாற்றியிருந்தது. இது குறித்து அவர்கள் வாய்திறக்க மாட்டார்கள். 

2019-ஆம் ஆண்டு புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். நாட்டுக்காக இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஆனால், மோடி வந்த பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் மீது வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்து அவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம் என்று கூறினார். 

தொடர்ந்து புதுச்சேரி பற்றி பேசிய அமித்ஷா, புதுச்சேரியில் அரசியல் நிலைத்தன்மை, நிலையான ஆட்சியை உருவாக்கியிருக்கிறோம். ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்து சுயமாக செயல்படும் அரசை உருவாக்கியிருக்கிறோம். புதுவையின் ஜவுளித் துறை புத்துயிர் பெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆட்சியில் புதிதாக ஒரு தொழில்கூட தொடங்கப்படவில்லை என்றார். மேலும், புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து