Idhayam Matrimony

4 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு: மாநிலங்களவையில் 86 ஆக குறைந்த பா.ஜ.க.வின் பலம்

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024      இந்தியா      அரசியல்
Parliament 2023 05 27

புதுடெல்லி, 4 நியமன எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 86 ஆக குறைந்தது.

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களான ராகேஷ் சின்ஹா, ராம் சகல், சோனல் மன்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகிய 4 பேரின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. நான்கு பேரும் ஓய்வு பெற்றதையடுத்து, மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 86 ஆக குறைந்துள்ளது. அத்துடன் மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 101 ஆக உள்ளது.

மாநிலங்களவையின் தற்போதுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும். 20 உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன. தற்போதைய நிலவரப்படி, பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அந்த எண்ணிக்கை இல்லை. எனவே, மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற, முன்னாள் கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளை அரசு நம்பி உள்ளது.

மாநிலங்களவையில் இன்டியா கூட்டணியின் பலம் 87 ஆக உள்ளது. காங்கிரசுக்கு 26 உறுப்பினர்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 13 உறுப்பினர்களும் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி, தி.மு.க. தலா 10 உறுப்பினர்களை கொண்டுள்ளன. எனினும் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜ.க.வுக்கு கூடுதலாக 9 உறுப்பினர்கள் கிடைக்கலாம். அத்துடன், நியமன எம்.பி.க்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு அளித்தால் பா.ஜ.க. கூட்டணி மெஜாரிட்டியை தாண்டிவிடும். அதேசமயம், ஜம்மு காஷ்மீர், தெலுங்கானாவில் தேர்தல் நடத்தும்போது காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும். இதன்மூலம், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து