முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடவுள் எனது பக்கம் உள்ளார்: துப்பாக்கிச்சூடு குறித்து மனம் திறந்த டிரம்ப்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2024      உலகம்
Trump

Source: provided

வாஷிங்டன் : கடவுள் என் பக்கம் இருக்கிறார். எனது தலையை அசைக்காமல் இருந்திருந்தால் தோட்டா குறிவைக்கப்பட்ட எனது நெற்றியில் பாய்ந்திருக்கும் என்று துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் மனம் திறந்து பேசியுள்ளார். 

அமரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ப். கடந்த வாரம் பென்சில்வேனியாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டது. 

இந்த சம்பவத்தில் குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றதால் நூலிழையில் டிரம்ப் உயிர்தப்பினார். இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய தாமஸ் க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். 

 இந்நிலையில்  துப்பாக்கிச் சூட்டுக்கு பின் கடந்த 18-ம் தேதி  நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் கட்சியினரிடையே  மனம் திறந்துள்ளார். குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் மாநாட்டில் அவர் பேசியதாவது,

நான்கு மாதத்தில் அதிபர் தேர்தலில் நம் மிகப்பெரிய வெற்றியை பெற உள்ளோம்.  நான் முழு அமெரிக்காவுக்கும் அதிபர், பாதி அமெரிக்காவுக்கு மட்டுமல்ல என்று தெரிவித்தார். 

மேலும் துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து விவரித்த அவர், எல்லா இடங்களிலும் ரத்தம் சிந்திக் கொண்டிருந்தது,  இருந்த போதிலும் நான் மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தேன். 

கடவுள் என் பக்கம் இருக்கிறார். கடைசி நொடியில் நான் எனது தலையை அசைக்காமல் இருந்திருந்தால் தோட்டா குறிவைக்கப்பட்ட எனது நெற்றியில் பாய்ந்திருக்கும். இன்று உங்கள் முன்னாள் நான் இருந்திருக்க மாட்டேன். 

நான் இங்கு இருந்திக்க வேண்டியவனே இல்லை. ஆனால் கடவுளின் கருணையால் இங்கு உங்கள் முன் நிற்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த பாதுகாப்பு வீரருக்கு  டிரம்ப் அஞ்சலி செலுத்தினார். 

இந்த கூட்டத்தில் பங்கேற்ற குடியரசுக் காட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது காதில் டிரம்பைப் போல் கட்டு போட்டிருந்தது அனைவரின் கவனத்தையும்  ஈர்த்து வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து