முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      தமிழகம்
MR-Vijjyabaskar 2024-07-07

Source: provided

கரூர் : கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர். தொடர்ந்து அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், நில மோசடி வழக்கில், கைதான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். ஜாமீன் மனு மீதான விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். இதற்கிடையே, விசாரணைக்காக அவரை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து