முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் மொத்த கடன் ரூ.2,900 லட்சம் கோடியாக உயர்வு

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      உலகம்
Whit haues 2023-08-29

வாஷிங்டன், அமெரிக்க அரசின் கடன் மதிப்பு, முதல் முறையாக 2,900 லட்சம் கோடி ரூபாயை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அமெரிக்க அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, அமெரிக்காவின் மொத்த கடன் மதிப்பு, கடந்த திங்களன்று 2,900 லட்சம் கோடி ரூபாயை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தான் அந்நாட்டின் மொத்த கடன் மதிப்பு 2,800 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய நிலையில், அடுத்த ஆறே மாதங்களில் 2,900 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நடப்பு காலாண்டில், அமெரிக்க அரசின் கடன் குறித்த மதிப்பீட்டையும் நிதித்துறை குறைத்துள்ளது. இதன்படி, நடப்பு ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அரசின் நிகர கடன் கிட்டத்தட்ட 61 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணித்துள்ளது. இதற்கு முன்பு 70 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணித்திருந்தது. 

இதுமட்டுமல்லாமல், நடப்பு செப்டம்பர் காலாண்டின் முடிவில் அரசின் கையிருப்பு, 71 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது. மேலும், அரசின் நிதி இருப்பு, நடப்பாண்டு இறுதி வரை போதுமானதாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து