எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : 2 நாட்களுக்கு முன்பு 2 வண்ண நாரைகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை டெல்லி தேசிய விலங்கியல் பூங்கா தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விலங்கியல் பூங்காவின் இயக்குனர் சஞ்சீத்குமார் கூறுகையில், “இறந்துபோன வண்ண நாரைகளின் மாதிரிகள் கடந்த 27-ந்தேதி போபாலில் உள்ள தேசிய விலங்கு நோய்களுக்கான நிறுவனத்துக்கு பறவைக்காய்ச்சல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அந்த 2 மாதிரிகளிலும் ‘எச்.எஸ்.என்.1’ என்கிற பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பது 28-ம் தேதி உறுதி செய்யப்பட்டது.
இது மற்ற விலங்குகள், பறவைகள் மற்றும் பூங்காவின் பாதுகாப்பு ஊழியர்களுக்கு பரவுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உயிரியல் பாதுகாப்பு நெறிமுறையை வலுப்படுத்துவதற்காக, உயிரியல் பூங்கா ஆகஸ்டு 30-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர்களுக்கு தற்காலிகமாக மூடப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
பறவைக்காய்ச்சல் பறவைகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பரவும் என்பதால், மேற்படி பறவைக்காய்ச்சல் உறுதி தகவல், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


