எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா மே மாதம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய காட்சிகள் மற்றும் விவரங்களை இந்திய விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி பகிர்ந்து கொண்டார்.
மேலும் இந்தியாவின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் 4 நாட்களிலேயே மண்டியிட்டது என்றும் இந்த தாக்குதலில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதாக டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விமானப்படை துணைத்தளபதி நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஆபரேஷன் சிந்தூரில் 50-க்கும் குறைவான ஆயுதங்களிலேயே, தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது. பாகிஸ்தானை மண்டியிட வைத்து முழுமையான ஆதிக்கத்தை அடைய முடிந்தது எங்களுக்கு ஒரு முக்கிய படிப்பினையாக இருந்தது. இதற்கு முன்பு இது நடந்ததில்லை.
நாங்கள் ஒவ்வொரு ஆயுதத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டோம். அது எங்கள் திட்டமிடுபவர்கள் மற்றும் செயல்படுத்தியவர்களின் திறனை வலிமையாக ஒப்புக்கொள்வதாகும், 1971-ம் ஆண்டு போரில் தாக்குதலுக்கு ஆளாகாத பாகிஸ்தானின் சில இலக்குகள் கூட ஆபரேஷன் சிந்தூரில் எங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. அந்த அளவுக்கு நாம் அவர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தினோம்.
எங்கள் திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு மக்களுக்குத்தான் இதற்கான பெருமை சேரும். ஏனெனில் இது எளிதான விஷயம் அல்ல. இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த நோக்கம் பாகிஸ்தானுக்கு சரியான செய்தியை வழங்குவதுதான். அதை சரியாக செய்தோம் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


